சன் டிவி மீது நடவடிக்கை.. கமிஷனரை சந்திக்கும் ரஞ்சிதா?

Bookmark and Share

Alexander Skarsgard

தானும், சாமியார் நித்தியானந்தாவும் இருந்தது போன்ற வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளார் நடிகை ரஞ்சிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் வழக்குகள் பாயக் காத்துள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீதும் சன் பிக்சர்ஸ் மீதும் சன் டிவி நி்ர்வாகம் மீதும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் நித்தியானந்தா பக்தர்களும் சன் டிவி மீது புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் அவரது பக்தர்கள் கூட்டமாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நித்தியானந்தா, ரஞ்சிதா இடம் பெற்ற காட்சிகளை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கமிஷனரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளாராம். இன்று காலையே அவர் வருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வரவில்லை. மாலையில்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகை ரஞ்சிதா இன்று இரவு 7 மணிக்கு தி.நகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஹோட்டலில் சந்தித்துப் பேட்டி அளிப்பார் என்றும் பி.ஆர்.ஓ மூலம் செய்தி ஒன்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நித்தியானந்தாவின் முதல் நிலை சீடராக நடிகை கவுசல்யா நியமிப்பு : ரஞ்சிதா புறக்கணிப்பு!
அக்கம் பக்கம் தொந்தரவு வீடு மாறும் - நடிகை ரஞ்சிதா!
நித்தியானந்தா ரஞ்சிதா தொடர்பான‌ படத்தின் தடயை நீக்க கோரிக்கை!
குரு - சீடர் உறவு : பொங்கி எழுந்த நடிகை ரஞ்சிதா
சன் டிவி அலுவலகத்தி எடுக்கப்பட்ட மிஷன் இம்பாசிபிள் கிளைமாக்ஸ்!
சன் பிக்சர்ஸுக்கு தடைடை விதிக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு !
பழனி மலையில் மெகா சீரியல் குழு
மங்காத்தாவை வெளியிடும் மூன்று பெரிய நிறுவனங்கள்.!
சக்சேனா மீதான இரு வழக்குகள் வாபஸ்!!
நித்தியானந்தா முன்பு ஆனந்த நடனமாடிய நடிகை ரஞ்சிதா !






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2013. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions