
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும், ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்திலும் நடித்திருக்கிறார். இவ்விரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஜோதிகா அடுத்தாக நடிக்க இருக்கும் படம் பற்றி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த புதிய படத்தை ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்க இருக்கும் இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries