யாதுமாகி நின்றாய், பிரிவியூ

Bookmark and Share


Preview by : சரவணன்
Starring
வஸந்த்,
Direction
காயத்ரி ரகுராம்
Music
அஸ்வின் விநாயகமூர்த்தி
Production
கிரிஜா ரகுராம்

தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின்   கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றாய்'. 
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில்  நடிகையாக அறிமுகமான காயத்ரி

ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும்  அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றாய்' என்ற படத்தின் மூலம்  இயக்குநர்  அவதாரம் எடுக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் வஸந்த் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, இயக்கம் - காயத்ரி ரகுராம், தயாரிப்பாளர் - கிரிஜா ரகுராம், இசையமைப்பாளர் - அஸ்வின் விநாயகமூர்த்தி  மற்றும் அச்சு, பாலாசிரியர் - கபிலன், அச்சு 
இந்த படம் சாதரண, பின்னணியில் நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும்  முதல் தமிழ் படமாகும்.

ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மைய கதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றாய்'.    பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை  கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை   காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும்,   ஆசைகளோடும் தனது வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க   முடியாத கொடுமைகளும், அவலங்களையும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாக காயத்ரி ரகுராம் எடுத்து  வருகிறார்.


Post your commentAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions