ஒரு கிடாயின் கருனை மனு, முன்னோட்டம்

Bookmark and Share


Preview by : சரவணன்
Starring
விதார்த், ரவீணா, ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி
Direction
சுரேஷ் சங்கையா
Music
எம்.ரகுமான்
Production
ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட்

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’.

இந்த படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா நடிக்கிறார். இவர்களுடன்  ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஆர்.வி.சரண், இசை-எம்.ரகுமான், எடிட்டிங்-கே.எல்.பிரவீன், ஸ்டண்ட்-ஹரி தினேஷ், கலை-கிரவ் போர்டு, வசனம்-  வி.குருநாதன், சுரேஷ் சங்கையா, பாடல்கள்- வேல்முருகன், வி.குருநாதன்.

இயக்கம்-சுரேஷ் சங்கையா. இவர் ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டன் உதவியாளர்.

“இது கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதை. வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு  போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. இதில் ஆடு பலியிடுவது பற்றிய காட்சிகள் எதுவும்  கிடையாது. விதார்த், டப்பிங் கலைஞர் ரவீணா யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை படம்.ராஜபாளையம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

விதார்த், “மைனா, படத்துக்குபிறகு என் மனதுக்கு நெருக்கமான கதை இது” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் நாசர், இயக்குனர் பிரபுசாலமன் மற்றும் படக்குழுவினர் கலந்து  கொண்டனர்.


Post your commentAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions